By an amateur கவிஞர்

You and my Dad

I see my dad in you
Not the way you talk
Or the way you walk

Not the way you look
Or the way you cook

Not the way you think
Or the way you blink

Not the way you write
Or the way you fight

Its because…
you both always make sure to keep the “Angel of your life” happy.

You both cannot start your day without smiling at me
Or end your day without fighting with me

You both don’t have a secret or a chocolate
That you’ve not shared with me.

You both get angry when I cry
Because you don’t want others to know how YOU cry 😀
Because you cannot stop your tears when I cry 🙂

I love you both to the stars and back 🤗
Even more than what my words can describe

Happy Valentine’s Day

Our marriage ceremony
Even though was cartoony
Decided our destiny

I might be skinny
I might not be a brainy
But I can be a pony
To carry all your worries
And make your life shiny

Be it a sunny or rainy
I am always there to accompany

I can fill your tummy
By cooking food yummy
But that will happen only when you are dreamy 😋

When you feel gloomy
I am always there to do something funny
To see your smile which will strengthen me
And make me a one woman army

My dear cute bunny
I don’t have a penny
To gift you many

Let’s be a good symphony
And live our life in harmony

Let’s be a good testimony
For a successful matrimony

Happy Valentine’s day my Sweet Raw Unrefined Honey

உன் திருப்பணிக்காக அடியேன் கை ஏந்தினேன்
ஏந்திய கைகளை வெட்டி எறிந்திருக்கலாம்
வலித்திருக்கும் ஆனால் வருந்தியிருக்கமாட்டேன்

மாறாக மனதை புண்படுத்திவிட்டார்கள்
சேவையை சேதமாக்கிவிட்டார்கள்

கண்ணா…
பாஞ்சாலிக்கு சேலை தந்தாய்
மானம் காக்க

அர்ஜுனனுக்கு கீதை தந்தாய்
தைரியம் காக்க

தாயாய் தந்தையாய் தோழியாய் குருவாய்
அனைத்துமாய் இருக்கும் நீ

உன் மீதுள்ள பக்தியை காக்க
சேவை புரியும் மனத்தை காக்க
எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை காக்க
அடியேனுக்கு என்ன தரப்போகிறாய்?

You & I

I melt like a snow on your warm touch
I blush like a rose on your lustful look
I hear your voice all the time when I’m awake
I feel your cuddle all the time I’m asleep
I want to lie on your lap when I cease to exist

When I’m near
Have no fear
I always swear
I will love you ever

அன்பான ஆஷியம்மாவிற்கு அழகாய் அவதரித்தீர்
இன்னல்களைத் தாண்டி இலக்கை நோக்கிப் பயணித்தீர்
ஜனாதிபதி ஆயினும் ஜனங்களின் தோழராநீர்
விஞ்ஞானம் தாண்டி வியக்கவைக்கும் சாதனைகள் பல புரிந்தீர்
அடக்கமும் அறிவும் நிறைந்த அன்பான ஆசிரியராய் பணியாற்றினீர்
புவியைக் காக்கும் முறையை புன்சிரிப்போடு கற்றுத் தந்தீர்
நாட்டின் முதற் குடிமகனாயமர்ந்து முன்னுதாரணமாய்த் திகழ்ந்தீர்
குடிசை முதல் கோபுரம் வரை அனைவராலும் போற்றப்பட்டீர்
கவிதைகள் பல தந்து கவிஞராகவும் உருவெடுத்தீர்
விமானம் தொட்ட கரங்களால் வீணையை மீட்டி வியக்க வைத்தீர்
இயற்பியலில் மட்டுமல்ல இசையிலும் நாட்டம் கொண்டீர்
விருதுகளைக் கையில் ஏந்தி விருதுகளுக்குப் பெருமை சேர்த்தீர்
எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாய் விளங்கினீர்
மனிதாபிமானம் நிறைந்த மாமேதையாய் வாழ்ந்தீர்
மாணவ சமுதாயம் மீது மட்டற்ற பாசம் கொண்டீர்
இறுதி மூச்சினை இளைஞர்களின் சபையில் சுவாசித்து
இன்பமாய் இறைவனடி சேர்ந்தீர்

ஐயா,
உங்களை நாங்கள் இழக்கவில்லை
மரணம் உமக்கு ஓய்வு காலம் தான்
உம்மை அறிந்த அனைவரின் நெஞ்சங்களில் என்றும் வாழ்கிறீர்…

ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையாய் உழைப்போம்
உங்கள் கனவை நினைவாக்கும் இலக்கை நோக்கிப் பயணிப்போம்
வளர்ந்த இந்தியாவில் தாங்கள் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுகிறோம்

A – Asked us to dream
B – Boldly faced difficulties
D – Dreamed of a Developed India
U – Ultimate Soul
L – Laureate Scientist

K – Kempt Personality
A – Achieved Simplicity
L – Laudable Teacher
A – Accomplished Human
M – Man of Peace

என்னை மடியிலிட்டுத் தாலாட்டியவர் என் தந்தை
என்னை மனதில் நிறுத்திச் சீராடிவரும் நீரும் எனக்குத் தந்தை

மருமகளாய் உம் வீட்டிற்கு மனமார அனுப்பியவர் என் தந்தை
மற்றும் ஓர் மகளாய் என்னை பாவித்துவரும் நீரும் எனக்குத் தந்தை

சொந்த பந்தங்களின் அருமையைக் கற்றுத்தந்தவர் என் தந்தை
சொந்த பந்தம் போற்றும்படி வாழ்ந்து காட்டிவரும் நீரும் எனக்குத் தந்தை

எழுபிறப்பிலும் என் தந்தைக்கே நான் மகளாக வேண்டும்
எப்பிறப்பிலும் உம் மகனுக்கே நான் மாலையிட வேண்டும்

என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றவள் என் அன்னை
என்னைப் பத்து மாதம் காத்திருந்து பெற்றவள் என் அத்தை

அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தம் தந்தவள் என் அன்னை
அன்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்பவள் என் அத்தை

கரண்டி பிடிக்கக் கற்றுத்தந்தவள் என் அன்னை
கண்ணான கணவனை எனக்குப்பெற்றுத் தந்தவள் என் அத்தை

பட்டமும் பதவியும் பெறச் செய்தவள் என் அன்னை
பணிவையும் பொறுமையையும் கற்றுத் தந்தவள் என் அத்தை

என் நாவினைத் தன் சமையலுக்கு அடிமையாகியவள் என் அன்னை
அச்சுவையை அப்படியே நினைவூட்டுபவள் என் அத்தை

என்னைப் பெற்றெடுத்த தாயை கண்களில் சுமக்கிறேன்
என்னைப் பெறாத தாயே, உம்மை இதயத்தில் சுமக்கிறேன்

என் கண்களின் இருக்கைகளில் நீ மட்டுமே அமர வேண்டும்
என் செவிகளுக்கு விருந்து உன் நாவிலிருந்தே எழ வேண்டும்
என் கைகளுக்கு ஊன்றுகோல் உன் கைகளாகவே இருக்க வேண்டும்
என் தலைக்கு மென்மையான தலையணை உன் மடியாகவே இருக்கவேண்டும்
என் கால்கள் தேடும் பாதையை உன் கால்களே காட்ட வேண்டும்
என் வாழ்வின் பொருள் உன் வெற்றியாகவே இருக்க வேண்டும்